37 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்.. உலக நாயகன் காம்போ – வெளியான அனல் பறக்கும் அப்டேட்!!

0
37 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்.. உலக நாயகன் காம்போ - வெளியான அனல் பறக்கும் அப்டேட்!!
37 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்.. உலக நாயகன் காம்போ - வெளியான அனல் பறக்கும் அப்டேட்!!

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா ராணி புது சந்தியா இப்படி ஒரு கவர்ச்சி நாயகியா? – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

வேற லெவல் காம்போ:

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக, விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததாக அதன் இயக்குனர் வீடியோ வாயிலாக அறிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின், கிளைமாக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

37 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்.. உலக நாயகன் காம்போ - வெளியான அணல் பறக்கும் அப்டேட்!!
37 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்.. உலக நாயகன் காம்போ – வெளியான அணல் பறக்கும் அப்டேட்!!

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான Geraftaar என்ற படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் கமல் இணைந்து நடித்தனர். இதையடுத்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரின் காம்போ மீண்டும் இணைந்துள்ளது. அமிதாப் பச்சன் கலந்து கொண்ட படப்பிடிப்பு 4 முதல் 6 மணி நேரத்தில் நிறைவடைந்து விட்டதாகவும், இந்த படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here