ரசிகர்களை மிரள வைத்த கமலின் விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட் – இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ரசிகர்களை மிரள வைத்த கமலின் விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட் - இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படக்குழு அறிவிப்பு:

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது.

அந்த வகையில், ரசிகர்கள் வியக்கும் வண்ணம் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது, ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பான விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் ஆகிய இரண்டும் வருகிற மே 15 ஆம் வெளியாகும் என படக்குழு உறுதியாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பலத்த உற்சாகத்தில் மூழ்கினர். இந்த மரண மாஸ் அப்டேட்டை சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here