சூப்பர் ஸ்டாருடன் சேரும் உலகநாயகன் கமல் – விக்ரம் ரிலீசுக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

0
சூப்பர் ஸ்டாருடன் சேரும் உலகநாயகன் கமல் - விக்ரம் ரிலீசுக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!
சூப்பர் ஸ்டாருடன் சேரும் உலகநாயகன் கமல் - விக்ரம் ரிலீசுக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

உலக நாயகன் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் கமல் இருவரும் இணைந்து  நடிப்பதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிரடி அப்டேட்  :

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். உலகம் முழுவதும் இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட பிரமோஷன் வேலைகளில் கமல் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக, அண்மையில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து, நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல், மம்முட்டியுடன் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுவதாகவும், ஆனால் இதுவரை இதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு மம்முட்டி தன்னுடன்  நடிக்க நிச்சயம் சம்மதிப்பார் என நம்புகிறேன் என அந்த பேட்டியில் தெரிவித்தார். இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில், இருவரும் நடிப்பார்கள் என திரையுலகத்தில் பேசப்படுகிறது. இந்த பரபரப்பு பேட்டி தற்போது, ரசிகர்கள் பரவலாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here