கமலுக்கு என்ன தான் ஆச்சு.,இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

0
கமலுக்கு என்ன தான் ஆச்சு.,இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, உலகநாயகன் கமல் உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிகிச்சையில் கமல் :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமல். இவர் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் தலைவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் திடீர் உடல்நல குறைவு காரணமாக கமல், சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது கமலின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல், தற்போது நலமாக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் இந்த அறிக்கையால், கமல் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here