இந்தியன் 2 படத்தின் சுட சுட அப்டேட்.., அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த படப்பிடிப்பு.., முக்கிய பிரபலம் வெளியிட்ட பதிவு!!

0

இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரின் தந்தை நடிப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

இயக்குனர் சங்கரின் சினிமா கேரியரில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது இந்தியன் தான். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் உலக நாயகன் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

அது தவிர காஜல் அகர்வால், சித்தார்த் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் என்று சமீபத்தில் சில தகவல் இணையத்தில் கசிந்தது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக யோக்ராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக “பஞ்சாப் சிங்கம் இந்தியன் 2 படத்திற்காக தயாராகிறது” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here