ஆண்டவருடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய வாரிசு நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசன் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்:

உலக நாயகன் கமலஹாசனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. முத்த மகள் சுருதி ஹாசன் சில படங்களில் நடித்துள்ளார்.  இவரின் இரண்டாவது மகளான  அக்சரா ஹாசன் பாலிவுட் திரையுலகில் ஷமிதாப் என்ற படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் நுழைந்தார். இது மட்டுமில்லாமல், இவர் அஜித்தின் விவேகம் மற்றும் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

தற்போது, இவர் அக்கினி சிறகுகள், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர், இன்று (12 அக்டோபர் 2021) தனது 30 வது பிறந்தநாளை தனது தந்தை மற்றும் அக்கா சுருதி ஹாசனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here