தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் உலக நாயகன் கமலஹாசனுக்கு இன்று (நவ.7) பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கி உள்ளார். அதாவது காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இது பிக்பாஸா.., இல்ல மாயா பாஸா.., காண்டாகி கத்திய விஜே அர்ச்சனா – ப்ரோமோ இதோ!!