உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

0
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த  கணியாமூர் பள்ளியில் வருகிற 27 ஆம் தேதி முதல்  ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு முடிவு :

கள்ளக்குறிச்சி கணியாமூர் பகுதியில் உள்ள சக்தி பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி  மாடியில் இருந்து  குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக, இவரது தாய் குற்றம் சாட்டிய நிலையில்  இது குறித்த பிரச்சனை கலவரமாக வெடித்தது.

இதனால் சம்பந்தப்பட்ட அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அந்த பள்ளி மொத்தமாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நிலையில், கலவரத்துக்குள்ளான பள்ளியில்  முதல் கட்டமாக 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் 27 ஆம் தேதி முதல் நடக்க உள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து,  அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எரிந்து போன சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் கல்வி துறை வசம் உள்ளதாகவும், அவற்றை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here