கெளதம் இயக்கத்தில் மீண்டும் காக்க காக்க?? கம்பேக் கொடுக்க இருக்கும் சூர்யா.., அவரே வெளியிட்ட தகவல்!

0

வெந்து தணிந்தது காடு பட புரொமோஷனில் கலந்து கொண்ட கௌதம் மேனன் ரசிகர்களுக்கு குஷி படுத்தும் விதமாக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

காக்க காக்க 2:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தற்போது வரை சிறகடித்து வருபவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடுகிறது. மேலும் இப்படத்தின் புரொமோஷனில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கௌதம் மேனன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த நேரத்தில் ஒரு ரசிகை வாரணம் ஆயிரம் 2 எப்போது இயக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் கௌதம் மேனன் அந்த ஐடியா எனக்கு சிறிதளவும் இல்லை என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்களை வியக்கும் அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்தார்.

அதாவது அவர் கூறியதாவது, வாரணம் ஆயிரம் 2 எடுக்கப் போவதில்லை, ஆனால் நடிகர் சூர்யாவுக்கு ஒரு கதை வைத்திருக்கிறேன் அப்படம் காக்க காக்க 2 கூட இருக்கலாம் என கூறி ரசிகர்களை இன்பத்தில் குளிப்பாட்டியுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் கேரியரை மாற்றிய திரைப்படம் காக்க காக்க என்றால் அது மிகையாகாது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் கூடிய விரைவில் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here