ராதை மனதில்.. ராதை மனதில் என்ன ரகசியமோ? கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!

0
ராதை மனதில்.. ராதை மனதில் என்ன ரகசியமோ? கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!
ராதை மனதில்.. ராதை மனதில் என்ன ரகசியமோ? கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் . இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன் மற்றும் ராதையை வணங்குவது போல உள்ளார்.

சினிமாவில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதாவது இவர் 2004ஆம் ஆண்டு கியூன்! ஹோ கயா நா… என்று படத்தில் ஹீரோயின் அவர்களின் தோழியாக நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பளித்த திரை உலகம் தெலுங்கு தான்.

கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!
கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!

இதில் லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தன்னுடைய முதல் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் இந்த படம் அவருக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை தந்ததே தவிர வெற்றி அடையவில்லை. இவ்வாறு இவர் 2008ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 8 படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் தமிழில் வெளியான பழனி என்ற படம். இந்த படமே அவருக்கு தமிழில் முதல் படமாகவும் அமைந்தது. அவரால் இந்தக் படங்கள் மூலம் புகழ் பெற முடியவில்லை. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அவர் 4 படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் ராஜமவுலி இயக்கத்தில் அவர் இளவரசியாக நடித்த மகதீரா என்ற படம்.

கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!
கிருஷ்ண ஜெயந்தில் ராதையாக மாறிய விஜய் பட நடிகை!!!

அதன் பிறகு தெலுங்கு, தமிழ்,இந்தி என அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதன் மூலம் அம்மணி புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கையில் மயில் இறகு, புல்லாங்குழல் உடன் ஒரு ராதையாக தோற்றமளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here