தனது கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காஜல் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

அனைத்து மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் முதன் முதலாக தமிழில் நடிகர் பரத்துடன் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த பேரினை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் “பொம்மலாட்டம்” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் நடிக்காமல், இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தினார்.

இதனை அடுத்து தெலுங்கில் நடிகர் ராம் சரண் தேஜாவுடன் “மஹாதீரா” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் மூலமாக நடிகை காஜல் மிகவும் முன்னணி நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து அனைத்து மொழி படங்களிலும் தனது கவனத்தினை செலுத்தி முன்னேறினார். இதனை அடுத்து கடந்த ஆண்டு பிரபலமான தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பும் கூட நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்.

மீண்டும் கேலி கிண்டலுக்கு ஆளான கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

நேற்று தனது முதல் ஹோலி பண்டிகையினை கொண்டாடிய காஜல் தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here