காஜல் அகர்வால் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கணவர்.. அப்படி என்ன பன்னுனார் தெரியுமா??

0

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் இன்று (ஜூன் 19) அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் . இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.  அதே சமயம் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சுலு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’30 படங்கள் 30,00,000+ மகிழ்ச்சியான நினைவுகள்’  என்ற கேப்ஷனில் வித்தியாசமான வீடியோ ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால், தமிழில் சூர்யா, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களோடு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மாவீரன், ஜில்லா, மாரி, விவேகம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இவர் மேலும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின் இவரும் இவர் கணவரும் இணைந்து எடுத்த போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பகிர்வார். சமீபத்தில் கூட இவர் திரையுலகிற்கு கூடிய சீக்கிரம் டாட்டா காட்டா இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.இந்நிலையில் இன்று காஜல் அகர்வால் அவருடைய 36 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

எனவே அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் தன்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட மிக மகிழ்ச்சியான 30 படங்களை இணைத்து ஒரு விடியோவாக தொகுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த விடீயோவிற்கு “30 படங்கள் 30,00,000+ மகிழ்ச்சியான நினைவுகள்” என தலைப்பிட்டிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here