“போலா” பெயரில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

0
"போலா" பெயரில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்.., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கைதி திரைப்படம்:

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கொஞ்சம் ஆண்டுகளிலே மக்கள் மத்தியில் முன்னணி இயக்குனர் என்று தனது பெயரை பதித்தவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். படு சஸ்பென்ஸாக இருக்கும் இந்த திரைப்படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் தெரிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் லோகேஷின் இந்த வளர்ச்சிக்கு தொடக்க புள்ளியாக இருந்த திரைப்படம் என்றால் கைதி தான். ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்தி மொழியில் போலா என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

2வது குழந்தைக்கு சிறப்பு ஊதிய உயர்வு., 3 வது குழந்தைக்கு டபுள் சர்ப்ரைஸ் – மாநில அரசின் புதிய அறிவிப்பு!!

இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் போலா படத்தில் நரேன் நடித்த கதாபாத்திரத்தை மாற்றி பெண் போலீஸ் அதிகாரியாக அதில் தபுவை நடிக்க வைக்கின்றனர். தற்போது போலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பொழுது அந்த போஸ்டர் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here