கைதி படத்தின் ரீமேக்.., ஹிந்தியில் தெறிக்கவிட்ட பர்ஸ்ட் லுக்.., படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

0
கைதி படத்தின் ரீமேக்.., ஹிந்தியில் தெறிக்கவிட்ட பர்ஸ்ட் லுக்.., படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!
கைதி படத்தின் ரீமேக்.., ஹிந்தியில் தெறிக்கவிட்ட பர்ஸ்ட் லுக்.., படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவில் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறார். இந்த பெருமைக்கெல்லாம் அடித்தளமாக இருந்த படம் என்றால் அது “கைதி” தான். இந்த படத்தில் ஒரே இரவில் பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் ரசிக்கும் படி அமைத்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இந்த படம் 100 கோடி வசூல் செய்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு தொடங்க உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது லோகேஷ் “தளபதி 67″ல் பிசியாக இருப்பதால் “கைதி 2” படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்நிலையில் கைதி படத்தை “போலா” என ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியாக உள்ளது.

அப்போ தைரியம் இல்ல.., இப்போ வந்துருச்சு விரைவில் சிறந்த சம்பவம் இருக்கு.., சூசகமாக பேசிய ஜெயம் ரவி!!

இப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கனும், நடிகை தபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜனவரி 24ம் தேதி டீசரும் மார்ச் 30ல் திரையரங்குகளிலும் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here