குண்டு வெடிப்பினால் சுடுகாடான ஆப்கானிஸ்தான்!!!

0

ஆப்கானிஸ்தான் ரொம்பவே கொடூரமான நிலைல தான் இருக்கு, நாளுக்கு நாள் தொடர்ந்து சோதனை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்துட்டே இருக்கு. கணக்கே இல்லாம உயிர்சேதங்கள் ஏற்பட்டுட்டு இருக்கு. அந்த வரிசைல ஆகஸ்ட் 27 இரவு ஆப்கானிஸ்தான்ல குண்டு வெடிப்பு நடந்துருக்கு. இதுல 100 க்கும் மேற்பட்ட உயிர்சேதம் ஏற்பட்டிருக்கு. ஆப்கானிஸ்தான் காபூல் ஏர்போர்ட்ல மக்கள் கூட்டம் கூட்டமா வேறு வெளி நாடுகளுக்கு போயிட்டு இருக்காங்க. இதனால அங்க அதிகமான பிரச்சனைகள் நடக்குது. காபூல் விமான நிலையம் ஒரு உணவு விடுதினு இரண்டு இடங்கள்ல பயங்கரமான குண்டுவெடிப்பு நடந்துருக்கு. இந்த குண்டு வெடிப்புல 100 பேர் இறந்திருக்காங்க. இதுல 13 பேர் அமரிக்காவை சேர்ந்தவங்க. 140 மேற்பட்டவங்க காயம் அடைந்திருக்காங்க. மருத்துவமனையில சிகிச்சையில் இருகாங்க. இந்த குண்டு வெடிப்புல அமெரிக்கன் கடற்படையை சேர்ந்த 4 அதிகாரிகளும் உயிரிழந்துருக்காங்க. இந்த நிகழ்வை தொடர்ந்து அமெரிக்க மக்கள் யாரும் ஏர்போர்ட் வரவேண்டாம். முடிந்த அளவு உங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு அமெரிக்கா அறிவிப்பு குடுத்துருக்காங்க. இந்த தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திருக்காங்க. அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை தான் இதுக்கு காரணம்னு சொல்லிருக்காங்க. இதனால அமெரிக்கா தான் குண்டு வெடிப்புக்கு காரணம், இதுல எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைனு தாலிபான்கள் அறிவிப்பு குடுத்துருக்காங்க. இந்த குண்டு வெடிப்புல இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பா இருக்கறதா சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here