5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோதிகா….,உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்….,

0
5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோதிகா....,உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்....,
5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜோதிகா....,உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்....,

2000களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகா ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். என்றாலும், ஜோதிகாவுக்கு சினிமாவில் ஒரு நிலையான பெயரை வாங்கிக் கொடுத்தது தமிழ் திரையுலகம் தான்.

திரைப்படங்களில் நடித்து வந்த போது நடிகர் சூர்யாவை காதலித்த நடிகை ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகள் பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து, ராட்சசி, காற்றின் மொழி, உடன்பிறப்பே உள்ளிட்ட சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்தார்.

OTT க்கு வரும் ‘அவதார் பார்ட் 2’…..,ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ்….,

இப்போது, நடிகை ஜோதிகா மீண்டுமாக சுமார் 25 ஆண்டுகள் கழித்து ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற திரைப்படத்தில் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா. இப்போது, த்ரில்லர் வகையில் தயாராகும் புதிய திரைப்படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோருடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here