எனக்கு இந்த நடிகை தான் வேணும்… இயக்குனரை நச்சரித்த ஜி.வி பிரகாஷ்!!!

0

இசையமைப்பாளராக இருந்து பிறகு ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜி.வி பிரகாஷ். தற்போது இவர்  அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிகை காயத்ரி அவர்களை ஒப்பந்தம் செய்யுமாறு இயக்குனரிடம் தெரிவித்து உள்ளார்.

திரைத்துறையில் பல துள்ளல்  மற்றும் மெல்லிய பாடல்களுக்கு இசை அமைத்து ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஜி.வி பிரகாஷ். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு நடிகராகவும் மாறி தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.  ஒரு வருடத்திற்கு குறைந்தது நாலைந்து படமாவது கொடுத்து விடுகிறார். அதில் பாதி வெற்றி அடையும் பாதி தோல்வியை தழுவும்.

இருப்பினும்  பட வாய்ப்பு என்பது அவருக்கு குறையவில்லை.மேலும் இவரின் படங்கள் பெரும்பாலும் இளசுகளை கவரும் படங்களாகவே இருக்கும். அதாவது இரட்டை அர்த்த வசனங்கள், அடல்ட் நகைச்சுவைகள் போன்றவை அவரின் படங்களில் அதிகம் காணலாம்.

இருப்பினும் இந்த நினைப்பை மாற்றி, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் அவரின் நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்த படங்களாகும். இதனை அடுத்து இவர்  வசந்தபாலன், சீனு ராமசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அவர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்ட நடிகை காயத்ரி நடித்தால் நன்றாக இருக்கும் என ஜி.வி பிரகாஷ் தன்னுடைய விருப்பத்தை இயக்குனரிடம் தெரிவித்து உள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் காயத்ரி அவர்களும் இணைந்து உருவாகும் முதல் படம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here