3000 மருத்துவர்கள் ராஜினாமா…வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் பதிலடி!!!

0

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்,  அம்மாநிலத்தில் வேலை நிறுத்தம் செய்யும் ஜூனியர் மருத்துவர்களை 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தங்கள் பணியை தொடர வேண்டும் என வியாழக்கிழமை அன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்களில் 3000 மருத்துவர்கள் தங்கள் பதவிகளை  ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜூனியர் டாக்டர்கள், தங்களின் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும், கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும்  வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்ட   ஜூனியர் டாக்டர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் கடமைகளை  தொடங்கவில்லை எனில் அவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் இது குறித்து ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தின்  தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா கூறியதாவது, மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் தங்கள் போராட்டத்தில் சேருவார்கள் என்றும் , பல்வேறு மாநிலங்களின் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்தாகவும் கூறியுள்ளார்.

மே 6 அன்று அரசு எங்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்த நிலையில் தற்போது வரை அது நடக்கவில்லை. மேலும் தங்களின் உதவித்தொகையை 24 சதவீதம் உயர்த்துவதாக அரசு உறுதி அளித்துள்ளது இது உயர்த்தப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் வேலைநிறுத்தம் செய்த 3000 மருத்துவர்கள் தங்கள் பதவிகளை  ராஜினாமா செய்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here