கருப்பா??? வெள்ளையா??? எதுவுமே புரியலேயே… பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் வீடியோ!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் ஜூலி. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வித்தியாசமான உடையில் பிளாக் அண்ட் ஒயிட் என மாறி மாறி தோன்றுகிறார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சென்னை  மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார் ஜூலி. அதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ரியாலிட்டி ஷோவில் முதல் அனைவருக்கும் பிடித்தவாறு சக போட்டியாளர்களை அனுசரித்து மக்களின் பேராதரவை பெற்ற ஒரு சிறந்த போட்டியாளராக இருந்தார்.

அதன் பிறகு மக்களுக்கு மிகுந்த பிரியமான ஓவியாவை சீண்டியதாலும் மேலும் அவருக்கு எதிராக ஒரு சில செயல்களில் ஈடுபட்டதால் மக்களின் அபிமானத்தைப் இழந்தார். அதன் பிறகு ஒரு சில வாரங்களில் மக்களின் வாக்குகளை இழந்து அந்த நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அவரின் ஒரு சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை எதையும் காதில் வாங்காது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பளபளவென மின்னும் சட்டையில், வித்தியாசமான பேண்ட் அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் என மாறி மாறி தோன்றுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here