முழுக்க முழுக்க Cowgirl ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி…!அந்த போட்டோவ நீங்களே பாருங்க!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் மக்களுக்கு அறிமுகமானார்கள். அதில் ஒருவர் தான் இந்த ஜூலி. அவ்வப்போது   தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில், Cowgirl உடையில் மிகவும் வித்தியாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

உயிர் காக்கும் பணியான செவிலியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஜூலி. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்  மூலம் வீர தமிழச்சியாக மக்கள் முன் தோன்றினார். அதனையடுத்து  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் சில வாரங்கள் அமைதியாக இருந்தார். அதன் பின் மக்களின் பேராதரவு கொண்ட ஓவியாவிடம் அவர் செய்த செயல்கள் மக்கள் அனைவர் மத்தியிலும் மிகுந்த எரிச்சல் மற்றும் கடுப்பை வரவழைத்தது. இதனால் அவரின் மீது மக்களுக்கு இருந்த நல்ல பெயர் சரிய தொடங்கியது.

அதன் பின், மக்களின் வாக்குகள் குறைந்து அவர் அந்த நிகழ்ச்சியை  விட்டு வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த ஜூலி பட வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளார். கைவசம் ஒரு சில படங்களையும் வைத்து உள்ளார். தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் ரெட் கலர் டிரேஸ், தலையில் ஒரு தொப்பி வைத்து கொண்டு ஒரு Cowgirl மாதிரியான தோற்றத்தில் உள்ளார். இந்த வித்தியாசமான கெட்டப்பில் உள்ள அவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here