நீல நிற புடவையில் கும்முனு இருக்கும் பிக் பாஸ் ஜூலி…!இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த பலருள் ஜூலி அவர்களும் ஒருவர். அவர் தற்போது போட்டோ ஷூட்கள் பல நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் ஜாக்கெட்டில் நீல நிற புடவையில் அழகான ஏஞ்சல் போல தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தில் இருக்கும் அவரின் அழகை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று தமிழர்களுக்காக போராடி புகழ் பெற்றவர் ஜூலி அவர்கள். அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு மிக பிரபலமானவர். அங்கு முதலில் அனைவருடனும் பழகி நற்பெயரை  பெற்று வந்தார். அதன் பிறகு அவரின் பல செய்கைகள் அவர் மீதான நற்பெயரை இழக்க செய்தது. இதையடுத்து அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது மீண்டும் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளார். அதாவது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி மூலம் சென்ட்ராயன் அவர்களுக்கு ஜோடியாக நடன போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் ஜாக்கெட்டில்  நீல நிற புடவையில் அழகில் குறையாத ஒரு தேவதையாக காட்சி  தருகிறார். இந்த புகைப்படம் தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here