பாய்ஸ் பட பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஜூலி…! வைரல் வீடியோ உள்ளே!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஜூலி அவர்கள். தற்போது பாய்ஸ் படத்தில் உள்ள ‘மாத்தியோசி…மாத்தியோசி…சரிகம பதநிச’ என தொடங்கும் பாடலுக்கு குலுங்கு குலுங்கி செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரு செவிலியராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் ஜூலி. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு இரவு பகலாக போராடிய போராட்டக்கார்களுள் ஒருவர் தான் ஜூலி. இந்த போராட்டம் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார். இதை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதில் கலந்து கொண்டு, அந்த வீட்டுக்குள் பல பிரச்சனைகள் எதிர்கொண்டார். மேலும்  இவரின் விரும்பத்தகாத செய்கைகள் மூலம் மக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயரை இழந்தார்.

அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பட வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளார். அதற்காக தன்னை முழுவதுமாக மாற்றி கொண்டு வருகிறார். தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். இதில் சென்ட்ராயன் ஜோடியாக இணைந்து உள்ளார். இந்நிலையில் தற்போது ஜூலி, சங்கர் இயக்கத்தில் உருவான  பாய்ஸ் படத்தில் ‘மாத்தியோசி…மாத்தியோசி…சரிகம பதநிச’என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here