Saturday, April 20, 2024

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!

Must Read

அமெரிக்காவின் புதிய அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் இன்று நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். புதிய துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் செலுத்திக் கொள்ள இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல்:

2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து உலகத்தையே மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த நோயின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தாலும் அதிக பாதிப்புகளை சந்தித்தது அமெரிக்கா தான். கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனா கூட 2 மாதங்களில் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல வெளிவர தொடங்கியது. ஆனால் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 1,84,73,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,26,772 பேர் உயிரை விட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கான தடுப்பூசியை கண்டு பிடித்து உள்ளனர். அமெரிக்காவும் கொரோனாவிற்கான தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி:

இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பிடன் நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அடுத்ததாக, புதிய துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் பெண்களின் கல்வி நிலை உயர்ந்துள்ளது – பிரதமர் மோடி!!

ஆனால் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த அதிபர் ட்ரம்ப் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் உள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு ஃபைசர் நிறுவனம் பொறுப்பேற்காது என்று பிரேசில் நாட்டின் அதிபர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பூசியை தான் போடுவது பற்றி கருத்து ஏதும் சொல்லமால் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் அதிர்ச்சி.. வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில், நேற்று (ஏப்ரல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -