சர்வதேச இந்திய அணியானது தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சுற்றின் கடைசி போட்டியை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய விளையாட உள்ளது. இதிலும், இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன் பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த தொடரை ஜியோசினிமா 4k இல் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் மீண்டும் தாக்கப்படும் பழங்குடியின மக்கள்., துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!!!