தமிழகத்தில் இதற்கு முதலிடம்….,அரசு கொடுத்த ஷாக்கிங் அப்டேட்…,

0
தமிழகத்தில் இதற்கு முதலிடம்....,அரசு கொடுத்த ஷாக்கிங் அப்டேட்...,
தமிழகத்தில் இதற்கு முதலிடம்....,அரசு கொடுத்த ஷாக்கிங் அப்டேட்...,

இன்றைய காலத்தில் கையில் செல்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த வகையில், சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரிக்க எல்லாரது கைகளிலும் செல்போன் வந்து விட்டது. இப்படி மக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி இருக்கும் செல்போன்களில் மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கான சேவைகளை சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனத்திற்கு பிறக்கும் 2வது குழந்தையால் மகிழ்ச்சியில் குதிக்கும் மூர்த்தி., உணர்வுபூர்வ காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஏர்டெல், ஜியோ, வோடபோன் & ஐடியா மற்றும் BSNL போன்ற நிறுவனங்கள் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் முதல் தொலைத்தொடர்பு சேவையாக ஜியோ இருக்கிறது. அதாவது, இந்தியாவில் உள்ள 43,63,09,270 பேர் ஜியோ சேவையை பெறுகின்றனர்.

இந்த வரிசையில், இரண்டாவதாக ஏர்டெல் நெட்வொர்க் சேவையை 37,23,15,782 பேர் பெறுகின்றனர். அதே போல தமிழகத்தில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஏர்டெல் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் நெட்வொர்க்கை 2,74,98,627 பேரும், ஜியோவை 2,39,59,673 பேரும், வோடபோன் & ஐடியாவை 1,61,01,995 பேரும், BSNL ஐ 92,06,04 பேரும் பயன்படுத்துவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here