ஐபிஎல் 2023: தமிழ் உட்பட 11 மொழிகளில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஜியோ நிறுவனம் திட்டம்மா?? வெளியான அப்டேட்!!

0
ஐபிஎல் 2023: தமிழ் உட்பட 11 மொழிகளில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஜியோ நிறுவனம் திட்டம்மா?? வெளியான அப்டேட்!!
ஐபிஎல் 2023: தமிழ் உட்பட 11 மொழிகளில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஜியோ நிறுவனம் திட்டம்மா?? வெளியான அப்டேட்!!

இந்தியாவில் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பல உள்ளூர் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற தொடராக ஐபிஎல் முதலிடம் வகிக்கிறது. இதற்கு பெரிய உதாரணம், கடந்த ஆண்டு மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தொடராக ஐபிஎல் முதலிடம் பெற்றதே ஆகும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தை 5 கோடி பேருக்கு மேல், லைவ்வாக இணையத்தில் பார்த்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த அளவுக்கு ஐபிஎல்- லீக்கானது மக்கள் மத்தியில் விரும்பத்தக்கதாக இருப்பதற்கு, இந்தியாவின் முன்னணி வீரர்கள் பலர் தங்களது சொந்த மண்ணில் விளையாடுவது ஒரு காரணமாக உள்ளது.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றம்…, ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி அபாரம்!!

மேலும், ஐபிஎல் லீக்கை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்கு, ஊடகங்கள், இணையத்தளங்கள், டிஜிட்டல் பிளேயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். எதிர்வரும் ஐபிஎல் சீசனை Viacom18 (Sports 18) ஒளிபரப்ப செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, Disney+ Hotstar போட்டிகளை பார்ப்பது போல, ஜியோ பயன்பாட்டில் இலவசமாக பார்ப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழ், பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகளில் இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here