இந்தியாவில் “ஜியோ” நெட்வொர்க் அறிமுகமான நாள் முதல் பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது. இதனால் குறுகிய காலத்திலே அசுர வளர்ச்சி அடைந்ததோடு, இன்றளவும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. தற்போது ஜியோ நெட்வொர்க் அறிமுகமாகி 7 வது ஆண்டை நிறைவு செய்துள்ளதால், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது,
- 299 ரூபாய் பிளானுக்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, தினசரி 2 ஜிபி. டேட்டா சலுகையுடன் கூடுதலாக 7 ஜி.பி. வழங்கப்படும்.
- 749 ரூபாய் பிளானுக்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, தினசரி சலுகையுடன் 14 ஜி.பி. கூடுதலாக வழங்கப்படும்.
- ஒரு வருட ரூ.2,999 பிளான் ரீசார்ஜ் செய்தால், தினசரி 2.5 ஜி.பி.யுடன் கூடுதலாக 21 ஜி.பி. டேட்டா ஆஃபர் பெற்று கொள்ளலாம்.
- இந்த ஆஃபர் இன்று (செப்டம்பர் 5) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே.
ஆசிரியர் தின விழா எதிரொலி: தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்? எழுந்த கோரிக்கை!!!