இந்த ஜியோ மீட் செயலி, மற்ற வீடியோ கான்பரன்சிங் வசதிகளான ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் போன்ற விண்ணப்பங்களுக்கு எதிராக போட்டியில் நுழைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு உள்ள இந்த சமயத்தில் ஜூம் போன்ற செயலிகளின் தேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ மீட்:
இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை ஜியோ தனது சிறிய அளவிலான பயனாளிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிமுகப்படுத்தியுள்ளது .இப்பொழுது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஸ் பயனாளிகளுக்கும் கிடைக்கும் வண்ணமாக கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாது கூகுள் Chrome மற்றும் Mozilla ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.
இந்த ஜியோமீட் ஆப் நேரடி அழைப்புகள் முதல் 100 பங்கேற்பாளர்களுடன் மீட்டிங்களை நடத்துவது வரையிலான ஆதரவை கொண்டுள்ளது. தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் ஜியோமீட் உடன் பதிவு செய்து கொள்ளலாம். ஜியோ மீட் வழியாக நடக்கும் மீட்டிங் ஆனது, பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கப்படலாம் மற்றும் இது ஜூம் போன்ற வெயிட்டிங் ரூமையும் கொண்டுள்ளது. இதன் மூலம் வரவேற்பின்றி யாரும் மீட்டிங்கில் கலந்துகொள்ள முடியாது .
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஜியோமீட் பயன்பாடு ஜூம் போன்று ஒத்த அம்சங்களை வழங்குகிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஜூம் ஆப் போலவே அணைத்து அம்சங்களையும் ஆதரிக்கிறது. கூடுதலாக, அழைப்புகளின் கால அளவைக் கட்டுப்படுத்தும் ஜூம் போலல்லாமல் ஜியோ மீட் அதன் காலளவை 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆப் ஐந்து சாதனங்கள் வரையிலான மல்டி டிவைஸ் லாக்இன் ஆதரவை ஆதரிக்கிறது என்றும், அழைப்பில் இருக்கும்போது சாதனங்களுக்கு இடையில் நீங்கள் தடையின்றி மாறலாம் என்றும் ஜியோ நிறுவனம் கூறுகிறது.
இது பாதுகாப்பான பயன்முறை அம்சத்தையும், திரை பகிர்வு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இரண்டு மாத சோதனைக்கு பின் வெற்றிகரமாக இந்த செயலி ஜியோ அறிமுகப்படுத்தியிருப்பது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.