ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் – 200 நகரங்களில் களமிறங்கிய ‘ஜியோமார்ட்’

0

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் மளிகை சேவையான ஜியோமார்ட்டை நாட்டின் 200 நகரங்களில் தற்போது தொடங்கி உள்ளது. இது தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் களத்தில் இருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஜியோமார்ட் சேவை

இந்தியாவில் 200 நகரங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் ஆன்லைன் சேவையை ஜியோமார்ட் தொடங்கி உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் மும்பையின் சில இடங்களில் மட்டும் தொடங்கப்பட்ட ஜியோமார்ட் சேவை தற்போது 200 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இது எவ்வாறு செயல்படுகிறது என்கிற விபரமும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜியோமார்ட் மூலம் சேவையைப் பெற விரும்புபவர்கள், 8850008000 என்கிற ஜியோமார்ட்டின் வாட்ஸ்ஆப் எண்ணை தங்களது மொபைலில் சேமிக்க வேண்டும். இதன் மூலம் சேவைகளை பெறுவதற்கான இணைப்புப் பெறப்படுகிறது. ஆர்டர்கள் கிடைத்ததும் வாட்ஸ்ஆப்பில் அருகில் உள்ள மளிகைக் கடையுடன் ஷேர் செய்யப்படுகிறது. இதில் டோர் டெலிவரி வசதி இல்லை எனினும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் அது பேக் செய்யப்பட்டு அருகில் உள்ள மளிகைக்கடையில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here