இந்திய ஆடவர் அணி, 2023 உலக கோப்பை தொடரில் விளையாடி வருவது நாம் அறிந்ததே. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தன்வசப்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் இந்திய அணி மோதும் இருதரப்பு தொடர்கள் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் 5 T20 போட்டிகளும், ஆப்கானிஸ்தானுடன் 3 T20 போட்டிகளும், இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளும் விளையாட உள்ளது.

இந்த 3 தொடர்களை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடர்ந்து ஜியோ சினிமா ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம். இதற்கு அந்த ஆப்பிற்கு எந்த ஒரு சந்தா கட்டணம் கட்ட அவசியம் இல்லை. இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் T20 போட்டி வரும் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.