கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஜிகர்தண்டா. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா லீடு ரோலில் நடிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் ஷூட்டிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.