கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் லீடு ரோலில் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியிடப்பட்டது. முதலில் ரசிகர்களிடையே இப்படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் தற்போது மாஸ் காட்டி வருகிறது.
அதன் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரி குவித்திருந்தது. மேலும் இப்படம் இதுவரைக்கும் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போதும் இன்னும் இப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.