
பும்ராவை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் ஐபிஎல்லில் களமிறங்குவது கேள்வி குறியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிராபியில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜே ரிச்சர்ட்சன் தொடை தசைநார் பிடிப்பு காரணமாக பங்கு பெறவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் இவர், கிரிக்கெட்டில் காயங்கள் என்பது ஒரு பெரிய பகுதி, அதில் இருந்து மீள கடுமையாக உழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ITF டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னா!!
இவர் பூரணமாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால், எதிர்வரும் ஐபிஎல் தொடர் உள்ளிட்ட தொடர்களை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ. 1.50 கோடிக்கு இவர் வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பும்ராவை தொடர்ந்து, ஜே ரிச்சர்ட்சனும் ஐபிஎல்-லிருந்து விலக இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.