ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… புதிய தளர்வுகள் இல்லை – ஜார்கண்ட் அரசு அறிவிப்பு!!!

0

ஜார்கண்ட் அரசு தற்போது அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூலை 1 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நீடிப்பில் புதிய தளர்வுகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் அம்மாநில அரசு இந்த ஊரடங்கை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது, “தொற்று பாதிப்பிலிருந்து நாம் தற்போது வரை முழுமையாக வெளியில் வரவில்லை. மேலும் கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கான வாய்ப்புகளும் தற்போது நிலவி வருகிறது. எனவே ஊரடங்கு ஜூலை 1 ஆம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் அம்மாநில அரசு சில தளர்வுகளை ஊரடங்கின் போது அளித்து இருந்தது. அதாவது மால்கள், கடைகள் போன்றவற்றை மாலை 4 மணி வரை அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து போக்குவரத்துக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here