அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி பாலும் வழங்கப்படும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ஒவ்வொரு மாநில அரசும், பள்ளி குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மாணவர் பசியின்றி கல்வி கற்க காலை உணவுத் திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த வரிசையில், ஜார்க்கண்ட் அரசு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது.
அதாவது ஜார்க்கண்ட் பால் கூட்டமைப்பு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், NBCC, CSR லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ‘கிஃப்ட் மில்க்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ராஞ்சியில் உள்ள எட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள சுமார் 3,500 குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here