
மத்திய அரசானது, கடந்த மாதத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்களுக்கான அகவிலைப்படியை 42%-திலிருந்து 46%-மாக சமீபத்தில் உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடுத்ததடுத்து உயர்த்தியது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசு நேற்று (நவம்பர் 3) அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்களுக்கான அகவிலைப்படியை 42% திலிருந்து 4% அதிகாரித்து 46%-மாக உயர்த்தி அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மின்சாரம் இல்லாத குக்கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்புகளை வழங்குதல், வணிக பைலட் பயிற்சியைத் தொடங்குதல் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக செயலர் அஜோய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.