ஜெயலலிதா இல்லம் அரசுடைமையானது – தீபா எதிர்ப்பு!!

0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடைமையானதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு 68 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கட்டிய காரணத்தால் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா இல்லம்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்க தமிழக அரசு சார்பில் 2017ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற மாதம் ஜெயலலிதா அவர்களின் வாரிசாக அண்ணன் மகள் தீபா, தீபக் உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் அவர்களின் சொத்தில் பங்கு உள்ளது என்பது தெளிவாகியது. மேலும் ஜெயலலிதா அவர்களின் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வர் இல்லமாக மாற்ற நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கட்டப்பட்ட நிலையில் வேதா இல்லத்தை அரசுடைமையாக அறிவித்து உள்ளது.

மேலும் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் இல்லமாக மாற்ற இயலாது என தெரிவித்து உள்ளது. அரசுடைமை ஆக்கப்பட்டதற்கு தீபா அவர்கள் கடுமையான எதிர்ப்பினை கூறி உள்ளார். இதனை எதிர்த்து சட்ட போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here