ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு – 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கினை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம்:

தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு 70 நாட்குளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று மறைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களால் இன்னும் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Armugam
Armugam

விசாரணை குழு அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் விசாரணை இழுபறியில் உள்ளது. ஆணையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் ஆணையத்திற்கு இடைக்கால தடையினை விதித்தது. இந்த தடை உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

‘என்ன நடந்திருந்தாலும், நின்னு போராடியிருக்கணும்’ – உருக்கமாக பதிவிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்!!

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் வலுவாக வாதாடினர். உச்சநீதிமன்ற நீதிபதியான அப்துல் நசீர் வேறு ஒரு வழக்கினை விசாரித்ததால் இந்த வழக்கினை அடுத்த 4வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here