ஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் – சட்டப்பேரவையில் முதல்வர்..!

0

குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்..!

சென்னையில் தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வரும் CAA க்கு எதிரான போராட்டம் இன்று தீவிரமடைந்து போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக சென்று வருகின்றார். நீதிமன்றத்தின் அனுமதியை மீறி நடந்து வரும் இந்த போராட்டத்தால் 5,000க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்வர் புதிய அறிவிப்புகள்..!

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி,

  • ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இனி மாநில பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும்.
  • ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்காக சென்னையில் 15 கோடி ரூபாய் செலவில் தங்குமிடம் கட்டித் தரப்படும்.
  • உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • உலமாக்களுக்கு ஆன உதவித்தொகை ரூ. 1500 இல் இருந்து ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த வருட பட்ஜெட்டில் மசூதி பராமரிப்பு செலவிற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here