முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரண வழக்கு – 90% முடிந்த விசாரணை!!

0

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் இன்னும் 4 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கால்வாசி முடிப்பு:

முன்னாள் முதல்வராகவும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மர்மமான முறையில் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த ஆணையத்தை இதற்கு முன் ஆட்சியில் இருத்த பழனிச்சாமி அமைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ள ஸ்டாலின் அரசும் இந்த வழக்கில் உள்ள உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் கடந்து விட்டதாகவும், இது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேலாக இதன் விசாரணை காலமும் நீடிக்கப்பட்டு விட்டது.  இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை  ஆணையத்தின் இறுதி அறிக்கையை விரைந்து சமர்பிக்க உத்தரவிடுமாறு வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இதில், இந்த ஆணையம் தெரிவித்ததாவது, கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஆணையம் தங்களை விசாரணை நடத்த கூடாது என ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை வாங்கி இருந்ததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டதாக இந்த ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுவரை 100 க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தபட்டுள்ளதாகவும், இன்னும் 4 சாட்சிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் தெரிவித்தது. இதனை அடுத்து, இந்த வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here