நான்கு கட்டங்களாக JEE மெயின் தேர்வு 2021 – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!!

0

அடுத்த கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நான்கு கட்டமாக நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் இந்த தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

ஜேஇஇ மெயின் 2021:

நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது அடுத்த ஆண்டு 4 கட்டமாக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜேஇஇ மெயின் 2021 இன் முதல் கட்ட தேர்வு பிப்ரவரி 22 முதல் 25 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 2021 இல் நடைபெறும், அடுத்த இரண்டு அமர்வுகள் ஏப்ரல் மற்றும் மே 2021 இல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

தேர்வு 13 மொழிகளில் நடைபெறும், மேலும் தேர்வாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம். அவர்கள் அதை பின்னர் மாற்ற முடியாது.

Exams
Exams

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் பள்ளிகள் திறக்காமல் பெரும் துயரத்தில் உள்ள சூழ்நிலையில் இந்த தேர்வு நடத்தப்படுவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்து பாடத்திட்டங்களில் 2 பிரிவுகள் கொண்டுவந்து இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் முக்கிய அறிவிப்பாக முதல் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே மாணவர்கள் முழு கல்வியாண்டையும் தொடர முடியும் இல்லையென்றால் அடுத்த ஆண்டு வரை காத்திருந்து மீண்டும் இந்த தேர்வை எழுத வேண்டும்.

மத்திய அரசு துறையில் 4000 காலிப்பணியிடங்கள்!!

மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு எழுத முடியாதவர்கள் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் கூறுகையில்,”‘பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here