தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு JEE நுழைவுத்தேர்வு இலவச பயிற்சி – கல்வித்துறை திட்டம்!!

0

தனியார் பள்ளி மாணவர்களை போலவே அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் JEE நுழைவு தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்படி பயிற்சியளிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக டெல்லியை சேர்ந்த “நெஸ்ட் ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் என்ற பயிற்சி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக பள்ளி கல்வி துறை கையெழுத்திட்டுள்ளது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது , தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர்.திரு. செங்கோட்டையன், செக்ரட்டரி தீரஜ் குமார் , பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் .S .கண்ணப்பன் மற்றும் “நெஸ்ட் ஜென் வித்யா பயிற்சி நிறுவனத்தின் ” CEO. கௌரவ் ஆகியோர் உடனிருந்தனர்.

minister sengottaiyan
minister sengottaiyan

இந்த பயிற்சி நிறுவனம், மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சியை இலவசமாகவே கொடுக்கும். மாணவர்கள் முக்கிய பாடங்களான கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியலில் நன்கு பயிற்சி பெறுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி படிக்கும் மாணவர்கள், பாடம் தொடர்பான சந்தேகங்களையும் உடனடியாக கேட்டு தெளிவு படுத்திக்கொள்வார்கள்.

முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி கிடைக்கும்!!

பாடங்களை படிக்க ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியான LOG IN ID யும் பாஸ்வர்ட்டும் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ள டிசம்பர் 21முதல் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ம் தேதி முதல் பயிற்சிகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here