நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!

0

இந்தியா முழுவதும் நடத்தப்படும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவிட்டது.

2020-21 கல்வியாண்டில் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் தகுதித் தேர்வை ஜூலை 26 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டப்படி இந்தத் தேர்வை நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து தரமான கல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ramesh-pokhriyal-nishank
ramesh-pokhriyal-nishank

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

இதையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்றும் ரத்து செய்யப்பட்டால் மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே சநதேகங்கள் எழுந்திருந்தது.அதையடுத்து செப்டம்பர் 13-ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜே.இ.இ. மேம்பட்ட தேர்வு வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here