ரேஷன் கார்டுக்கு இலவச செல்போன் திட்டம் என்னாச்சு – அதிமுக நிறைவேற்றாத வாக்குறுதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் அறிவித்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் 7நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளனர். அவை அனைத்தும் மக்களுக்கு மிக முக்கியமானவையும் கூட. அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது மற்ற கட்சிகளை வாட்டி வதைத்தும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல சர்ச்சைகள் கிளம்புகிறது. குறிப்பாக மற்ற கட்சிகள் செய்யும் தவறுகளை வைத்தே வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாங்கள் இதை செய்வோம் என்று கூறிய கட்சிகள் அனைத்தும் தற்போது அவர்கள் அதை செய்தார்களா என்று வினவி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் மக்களுக்காக தான் அதிமுக கட்சி என்றும் கூறிவருகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் கூட சில சர்ச்சைக்குரிய விஷயம் உள்ளது.

எடப்பாடியை விமர்சித்து பேசியதால் ஆ.ராசாவின் உருவபொம்மை எரிப்பு – அதிமுகவினர் கொந்தளிப்பு!!

அது என்னவென்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஓர் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்பு அவர் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டு பின்பு உயிரிழந்தார். தற்போது வரை அந்த திட்டத்தை பற்றி அதிமுகவினர் சிந்தித்து கூட பார்க்கவில்லை. காலப்போக்கில் இதனை மக்களுக்கும் மறந்துவிட்டது. காரணம் இதனை மறக்கடிக்கும் வகையில் தற்போது பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here