ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்.., இணையத்தில் லீக்கான முக்கிய ஆடியோ?? உண்மை வெளிவருமா??

0
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்.., இணையத்தில் லீக்கான முக்கிய ஆடியோ?? உண்மை வெளிவருமா??

ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ஆடியோ ஒன்று லீக்காகியுள்ளது.

ஜெயலலிதா

முன்னாள் முதலமைச்சரான ஜெ,ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதில் சசிகலா மற்றும் ராதாகிருஷ்ணன் சம்மந்தப் பட்டிருப்பதாகவும் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயலலிதா 1 மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு சசிகலா ஜெயலலிதா இறப்பை அரசியலாக்குகிறார்கள் என்று கொந்தளித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழக மக்களுக்கு சூப்பர் வசதி – இனி உங்க கோரிக்கை எல்லாம் நிமிஷத்துல பரிசீலனை! ஸ்டாலின் அதிரடி!!

விசாரணையில் முழு உண்மையும் வெளிவருமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் முக்கிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சரியாக கேட்கப்படாத அந்த ஆடியோவில் ஜெயலலிதா இருமிக்கொண்டே தனக்கு தொண்டை வலிப்பதாகவும், நான் கூப்பிடும் போது ஏன் வரல, இங்க யாருமே சரியில்ல என்று சொல்வது போன்றும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ,மேலும் டாக்டரிடம் சசிகலா ஜெயலலிதாவை கண்டிப்பாக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டுமா?? என்று கேட்பது போன்று உள்ளது. ஆனால் இன்னும் இது குறித்த தெளிவான விவரம் தெரியவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் இனிமேலாவது வெளிவருமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Enewz_tamil (@enewz_tamil8)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here