தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, தற்போது திடீரென பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து படம் எடுத்துள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை அட்லீ பெற்றதால் ஜவான் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் .கலவையான விமர்சனங்களை பெற்ற ஜவான், வசூலில் முதல் நாளில் இருந்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் வெளிவந்த மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலக அளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.