அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எமோஷனல், ஆக்ஷன் என அட்லீயின் பாணியில் வெளியாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் மற்ற தமிழ்த் திரைப்படங்களின் ஸ்பூப் போல இருக்கிறது என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டாலும், ‘ஜவான்’ அட்லீயின் மாஸ்டர் பீஸாக மாறி இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ஒரே நாளில் 129 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் ஹிந்தி திரைப்படம் என சாதனை படைத்தது. இதையடுத்து, இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 621 கோடி வசூல் குவித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.