எதுவுமே ஈஸி கிடையாது…, டெத் ஓவர் கிங் பும்ரா வெளியிட்ட பதிவு…, இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??

0
எதுவுமே ஈஸி கிடையாது..., டெத் ஓவர் கிங் பும்ரா வெளியிட்ட பதிவு..., இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??
எதுவுமே ஈஸி கிடையாது..., டெத் ஓவர் கிங் பும்ரா வெளியிட்ட பதிவு..., இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

பும்ரா:

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா, சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாத காரணத்தால், டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே அணியில் இருந்து விலகினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின், இந்திய அணி எதிர்கொள்ளும் தொடர்களான, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் எதிரான அணியில் பும்ரா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில், பும்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு வீடியோ ஒன்றை போட்டு ரசிகர்கள் உற்சாகமடைய செய்துள்ளார்.

IND vs NZ: 16 பந்தை எதிர்கொண்டாலும் சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

பும்ரா தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் கேப்சனில், எதுவும் ஈஸி கிடையாது, ஆனால், எல்லாவற்றிக்கும் உயர்வான மதிப்பு இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவின் மூலம், பும்ரா விரைவில் இந்திய அணிக்கு திரும்பி விடுவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here