பும்ரா – ஹர்ஷல் T20 உலக கோப்பையில் இருப்பார்களா? உடற்தகுதி தேர்வில் வெளியான தகவல்!!

0
பும்ரா - ஹர்ஷல் T20 உலக கோப்பையில் இருப்பார்களா? உடற்தகுதி தேர்வில் வெளியான தகவல்.., இனி உங்க காட்டுல மழை தான்!!
பும்ரா - ஹர்ஷல் T20 உலக கோப்பையில் இருப்பார்களா? உடற்தகுதி தேர்வில் வெளியான தகவல்.., இனி உங்க காட்டுல மழை தான்!!

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆசிய கோப்பை தொடரில் களமிறங்காததால், இவர்களின் உடற்தகுதியை ஆராய்ந்து T20 உலக கோப்பையில் களமிறக்க முடிவு செய்துள்ளனர்.

இந்திய அணியில் பெரும் மாற்றம்!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் தற்போது T20 உலக கோப்பை மீது திரும்பியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி யார் இடம்பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே களமிறங்கினர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் T20 உலக கோப்பையில் கூடுதல் பந்து வீச்சாளர்களை களமிறக்க BCCI முடிவு செய்துள்ளது. அதன்படி பார்க்கையில் தற்போது பந்து வீச்சில் நல்ல பார்மில் இருப்பவர்கள் என்றால் அது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இவர்கள் தான். ஆனால் இந்த இருவருமே ஆசிய கோப்பையில் விளையாட வில்லை. இதனால் இவர்களின் உடற் தகுதி பற்றி தெரிந்து கொள்ள நேற்றைய தினம் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

அதன்படி வேகம், மற்றும் பவுலிங் லைன்களை நன்கு ஆராய்ந்த பயிற்சியாளர்கள், பும்ரா மற்றும் ஹர்ஷல் இந்திய அணிக்கு மீண்டும் செல்லலாம் என சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடர்களில் மோதவுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் பும்ரா, ஹர்ஷல் விளையாடுவார்கள் என BCCI அறிவித்துள்ளது. இதில் அவர்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here