விஜய் மகனும், விஜய் சேதுபதி மகளும் சேர போறாங்களா???  – என்ன நடக்க போதோ!!!

0

உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜயின் மகன் ஜேசனும், விஜய் சேதுபதியின் மகளான க்ரித்தியும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்புகிறார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

என்ன நடக்க போதோ:

தெலுங்கில் இந்த ஆண்டு வெளிவந்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி. கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இவர் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

தற்போது உப்பேனா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருக்கிறார். அதில் ஹீரோவாக தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து விஜயிடம் கேட்ட போது அவரும் சரி என்று சொன்னதாக  கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, உப்பேனாவை ஜேசன் சஞ்சய் மற்றும் க்ரித்தி ஷெட்டியை வைத்து ரீமேக் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சஞ்சய்க்கு கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருக்கவே விருப்பமாம். ஆகவே ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here